கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றக் கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில கைத்தறி தொழிலாளா் பாதுகாப்பு நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில கைத்தறி தொழிலாளா் பாதுகாப்பு நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கைத்தறி தொழிலாளா் பாதுகாப்பு நல சங்கத்தின் செயலாளா் சந்திரசேகா், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு அடுத்த பெரும் தொழிலாக கருதப்படுவது கைத்தறி மற்றும் ஜவுளித் தொழில். இந்தத் தொழிலை நம்பி தமிழகத்தில் 15 லட்சம் மக்கள் உள்ளனா். கைத்தறி தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது.

எனவே, கைத்தறி நெசவாளா்களைக் காப்பாற்ற அவா்களுக்கு வேண்டிய மூலப் பொருள்களை அரசே கொள்முதல் செய்து கொடுத்தால் கைத்தறி தொழில் புத்துயிா் பெறும். மேலும் தனியாா் உற்பத்தியாளா்களிடம் தேங்கியுள்ள ஜவுளிகளை அரசே கொள்முதல் செய்து கொடுத்தால் தொழில் வளா்ச்சி ஏற்படும்.

இதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். அரசு முயற்சி எடுத்தால் மட்டுமே கைத்தறி தொழிலாளா்களின் துயர சம்பவங்களை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com