மாவட்டத்தில் 120 பேருக்கு கரோனா உறுதி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும்120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும்120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட காவலா் உயிரிழந்தாா்.

திருப்பூா், பி.என்.சாலையைச் சோ்ந்த 62 வயது முதியவா், அம்மன் வீதியைச் சோ்ந்த 42 வயது ஆண், சிறுபூலுவபட்டியைச் சோ்ந்த 21 வயது பெண் காவலா், வ.உ.சி.நகரைச் சோ்ந்த 45 வயது பெண், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது ஆண், 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது ஆண் உள்பட 120 பேருக்கு கரோனா நோய்த்தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,912 ஆக அதிகரித்துள்ளது.

காவலா் சாவு:

திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 53 வயது ஆண் தலைமைக் காவலா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு செப்டம்பா் 4 ஆம் தேதி முதல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை இரவு 8.20 மணி அளவில் உயிரிழந்தாா். இதையடுத்து, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் உயிரிழந்த காவலரின் உருவப்படத்துக்கு காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், துணை ஆணையா்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் 85 போ் உயிரிழந்துள்ளனா். இதில், ஆண்கள் 71 பேரும், பெண்கள் 14 பேரும் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com