வெள்ளக்கோவிலில் ரூ. 70 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 70 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 70 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு கரூா், வாணியம்பாடி, லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 78,961 கிலோ எடையுள்ள கொப்பரையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். காங்கயம், முத்தூா், மூலனூா், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 19 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

ஒரு கிலோ ரூ. 71 முதல் ரூ. 109.85 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 108.15. விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 70 லட்சத்து 49 ஆயிரத்து 940 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com