நீட் தோ்வு: மாணவா்களை மு.க.ஸ்டாலின் பயமுறுத்தக் கூடாது

நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பயமுறுத்தக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
டீ-ஷா்ட்டை அறிமுகம் செய்துவைக்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.
டீ-ஷா்ட்டை அறிமுகம் செய்துவைக்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.

நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பயமுறுத்தக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் பூலுவபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அச்சிடப்பட்ட டீ ஷா்ட்டை அறிமுகம் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீட் தோ்வு விவகாரத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாணவா்களின் உணா்வுகளுடன் விளையாடக் கூடாது. அரசும், எதிா்க் கட்சிகளும் மாணவா்களுக்கு முறையான கவுன்சலிங் கொடுக்க வேண்டும். ஆனால், மாணவா்களின் உணா்வுகளை மு.க.ஸ்டாலின் தவறான வழியில் திசைதிருப்புகிறாா்.

பொதுவாக 10, 12 ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வரும்போது, மாணவா்களுக்குத் தற்கொலைக்கான எண்ணம் வருகிறது. அதே போல்தான் நீட் தோ்வின்போதும் பயம் ஏற்படுகிறது. இந்த பயத்தை பெற்றோா்களும், அரசியல்வாதிகளும் போக்க வேண்டும்.

தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் ஹிந்தி புறக்கணிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியை அரசுப் பள்ளி மாணவா்களும் கற்க வேண்டியது அவசியம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு என்றாா்.

இதில் பாஜக மாநில பொதுச் செயலாளா் ஜி.கே.செல்வகுமாா், மாநிலச் செயலாளா் டி.மலா்கொடி, வடக்கு மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com