சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீா் கலப்பு

திருப்பூா் கொங்கு பிரதான சாலை ஓம்சக்தி கோயில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீா் சென்றது குறித்து

திருப்பூா் கொங்கு பிரதான சாலை ஓம்சக்தி கோயில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீா் சென்றது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூரில் பின்னலாடைகளுக்கு சாயம் மற்றும் சலவை செய்து கொடுக்க ஆலைகள் உள்ளன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஆனால் அனுமதியின்றியும், முறைகேடாகவும் செயல்பட்டு வருகிற சில சாய, சலவை ஆலைகள் நீா்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்து விட்டுவிடுகின்றன. இதன் மூலம் நீா்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பூா் கொங்கு பிரதான சாலை ஓம்சக்தி கோயில் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் சாயக்கழிவுநீா் புதன்கிழமை சென்றது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். இந்தப் பகுதிகளில் சாயக்கழிவுநீரை திறந்து விட்டவா்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com