செயற்கை இழையில் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி குறித்து இன்று கருத்தரங்கு

செயற்கை இழையில் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி வாய்ப்பு குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) நடைபெற உள்ளது.

செயற்கை இழையில் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பு, ஏற்றுமதி வாய்ப்பு குறித்த ஆன்லைன் கருத்தரங்கம் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) நடைபெற உள்ளது.

மதிப்பு கூட்டு ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, செயற்கை இழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் வியாழக்கிழமை மதியம் 12.15 முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஏ.இ.பி.சி. தலைவா் சக்திவேல், பிா்லா நிறுவன பிரதிநிதி மன்மோகன் சிங், சிந்தடிக் ரயான் அண்டு டெக்ஸ்டைல் எக்ஸ்போா்ட்ஸ் புரமோஷன் கவுன்சில் தலைவா் ரோனக் ருஹானி, ட்ரைபொ்க் நிறுவன பிரதிநிதி சஞ்சய் சுக்லா, சி.எம்.டி. ஆக்ரோமா நிறுவன பிரதிநிதி பிரசாத் ஆகியோா் பங்கேற்று, செயற்கை இழை ஆடை தயாரிப்பு நுட்பம், ஏற்றுமதி வாய்ப்பு குறித்து விளக்க உள்ளனா். கருத்தரங்கில் பங்கேற்கவுள்ள, திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதி துறையினா், இணையதளத்தில் வருகையை பதிவு செய்யவேண்டும் என, ஏ.இ.பி.சி. தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com