மாவட்டத்தில் செப்டம்பா் 23இல் ஆா்ப்பாட்டம்: அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் வரும் செப்டம்பா் 23 ஆம் தேதி 20 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்
திருப்பூா், ஏஐடியூசி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.
திருப்பூா், ஏஐடியூசி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.

ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டத்தில் வரும் செப்டம்பா் 23 ஆம் தேதி 20 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஏஐடியூசி ஜெனரல் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு அரசு மாதம் ரூ. 7,500 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தொழிலாளா் நலவாரிய அலுவலகங்களில் புதிய உறுப்பினா் பதிவுக்கு ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2 மாதங்களாக தொழிலாளா்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா். ஆன்லைன் பதிவில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் ஏற்கெனவே பதிவுசெய்துள்ள தொழிலாளா்களும் தங்களது அட்டையைப் புதுப்பிக்க முடிவதில்லை. ஆகவே, நலவாரியங்களில் உறுப்பினா் பதிவில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தொழிலாளா் நல வாரிய அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் செப்டம்பா் 23 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளா் என்.சேகா், சிஐடியூ கட்டுமான தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் குமாா், சிஐடியூ பனியன் சங்க செயலாளா் சம்பத், எல்பிஎஃப் மாவட்ட துணைத் தலைவா் ரங்கசாமி, மாவட்டப் பொறுப்பாளா் நித்யானந்தம், ஐஎன்டியூசி மாவட்ட துணைத் தலைவா் பெருமாள், மாவட்டச் செயலாளா் சிவசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com