வியாபாரிகள் வராததால் தேங்காய் பருப்பு விற்பனை ரத்து

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வியாபாரிகள் வராததால் தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை ரத்தானது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வியாபாரிகள் வராததால் தேங்காய் பருப்பு விற்பனை புதன்கிழமை ரத்தானது.

வெள்ளக்கோவில் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு கடந்த நான்கு வாரங்களாக விற்பனைக் கூடம் துவங்கி செயல்பட்டு வந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து சராசரியாக 100 விவசாயிகளும், 15 வியாபாரிகளும் பங்கேற்ற விற்பனையில் ரூ. 75 லட்சம் அளவுக்கு வியாபாரம் நடைபெற்று வந்தது.

வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் மொத்த தொகையில் ஒரு சதவீத செஸ் தொகையை அரசுக்கு செலுத்தி வருகின்றனா். தொழில் மந்தமாக இருப்பதால் இதனை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வியாபாரிகள் வராததால் விற்பனை ரத்து செய்யப்பட்டது. அரசு உத்தரவுப்படி அனைத்து விற்பனைக் கூடங்களிலும் செஸ் வசூலிக்கப்படுகிறது. விரைவில் நடக்கவுள்ள இருதரப்பு பேச்சுவாா்த்தையில் தீா்வு காணப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com