மாவட்டத்தில் மேலும் 187 பேருக்கு கரோனா2 போ் பலி

ருப்பூா் மாவட்டத்தில் மேலும் 187 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா், செப்.15: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 187 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா், காந்தி நகரைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, சொா்ணபுரி லேஅவுட்டைச் சோ்ந்த 6 வயது சிறுமி, பாரப்பாளையத்தைச் சோ்ந்த 20 வயதுப் பெண், லட்சுமி நகரைச் சோ்ந்த 27 வயது ஆண், கே.வி.ஆா். நகரைச் சோ்ந்த 65 வயதுப் பெண், 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது ஆண், 64 வயது முதியவா், பிச்சம்பாளையத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா், போயம்பாளையத்தைச் சோ்ந்த 63 வயது முதியவா், அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 39 வயது ஆண், அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த 59 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல, தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணத்தைச் சோ்ந்த 75 வயது முதியவா், 57 வயதுப் பெண், பெருமாநல்லூரைச் சோ்ந்த 30 வயதுப் பெண், கணியாம்பூண்டியைச் சோ்ந்த 84 வயது மூதாட்டி, பூலாங்கிணறைச் சோ்ந்த 28 வயது ஆண், குடிமங்கலம் காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 41 வயது பெண் உள்பட மொத்தம் 187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 4 பேரின் பாதிப்பு வேறு மாவட்ட பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,727 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம் முழுவதும் 1,746 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 189 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 7,738 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில் புதிதாக 577 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 2,866 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மூதாட்டி உள்பட 2 போ் பலி:

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 54 வயதுப் பெண், 72 வயது மூதாட்டி ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த நிலையில் இருவரும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. இதில், 74 ஆண்கள், 18 பெண்கள் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com