காங்கயம் அரசு கலைக் கல்லூரியில் செப்.30 ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடி சேர்க்கை

காங்கயம் அருகே, முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் நேரடி சேர்க்கை செப்.30 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம்: காங்கயம் அருகே, முள்ளிபுரத்தில் உள்ள அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் நேரடி சேர்க்கை செப்.30 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: காங்கயம் அரசு கலைக் கல்லூரியில் தற்போதைய 2020-2021 கல்வி ஆண்டுக்கான பி.ஏ தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.ஏ., பொருளாதாரம், பி.பி.ஏ., பி.காம், பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய 7 பாடப் பிரிவுகள் அடங்கிய இளங்கலை, இளங்கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இறுதிக் கட்ட மாணவ-மாணவிகள் நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இதன்படி, இந்தக் கல்லூரியில் தற்போது அமலில் உள்ள கல்வி ஆண்டுக்கு இளங்கலை பயிலுவதற்கு விண்ணப்பித்த, விண்ணப்பிக்காத அனைத்து மாணவ-மாணவிகளும் சேர்ந்திட அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே இக் கல்லூரியில் பயில விருப்பம் உள்ள மாணவ-மாணவிகள் தங்களது ஆதார் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண்கள் பட்டியல், சாதிச் சான்று, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் இவைகளின் 3 வகை நகல்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு வேலை நாள்களில் நேரில் வந்து சேர்க்கை பெற்று, பயன்பெறலாம். மேலும் இந்த அரசு கலைக் கல்லூரியில் வருகிற 30 ஆம் தேதி (புதன்கிழமை) வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com