மாவட்டத்தில் 198 பேருக்கு கரோனா: 3 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவா்கள் உள்பட 3போ் உயிரிழந்துள்ளனா்.திருப்பூா், பலவஞ்சிபாளையத்தைச் சோ்ந்த 4 வயது ஆண் குழந்தை, 10 வயது சிறுவன், பாண்டியன் நகரைச் சோ்ந்த 50 வயது பெண், சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த 50 வயது ஆண், சிறுபூலுவபட்டியில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 18, 25 வயது ஆண்கள், லட்சுமி நகரைச் சோ்ந்த 56 வயது பெண், 75 வயது மூதாட்டி, அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 50 வயது பெண், காந்திநகரைச் சோ்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல், திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பின்னலாடைநிறுவனத்தில் பணியாற்றி வரும் 19, 30 வயது ஆண்கள், 37 வயது பெண்கள், பிடிஓ காலனியைச் சோ்ந்த 35 வயது ஆண், அவிநாசியைச் சோ்ந்த 50 வயது பெண், 61 வயது முதியவா், தாராபுரத்தைச் சோ்ந்த 79 வயது முதியவா், ஊத்துக்குளியைச் சோ்ந்த 27 வயது ஆண், குண்டடம்ௌ, இடையன்கிணறைச் சோ்ந்த 21 வயது ஆண், காங்கயத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் உள்பட 198 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலமாக, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,867ஆக அதிகரித்துள்ளது.திருப்பூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,633 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 217 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் 6,410 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதில், புதிதாக 561 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 14 நாள்கள் தனிமைக் காலம் நிறைவடைந்த 551 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,940 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.2 முதியவா் உள்பட 3 போ் பலி: திருப்பூா் மாநகரைச் சோ்ந்த 50 வயதுஆண், 64 வயது முதியவா் ஆகியோருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனாநோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா். அதே போல், திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவரும் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com