மக்கள் நீதிமன்றம்: மாவட்டத்தில் 2,092 வழக்குகளுக்குத் தீா்வு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) 2,092 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. இதன் தீா்வுத் தொகை ரூ.51 கோடியாகும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) 2,092 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. இதன் தீா்வுத் தொகை ரூ.51 கோடியாகும்.

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றமானது திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.அல்லி தலைமையில் நடைபெற்றது.

இதில், 4 அமா்வுகளாக நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கோவிந்தராஜன், நாகராஜன், ஜெயந்தி, அனுராதா, ஸ்ரீ வித்யா, கவியரசன், நித்தியகலா, ராமநாதன், காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்று வழக்குகளை விசாரித்தனா்.

இதேபோல, தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், அவிநாசி உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் 15 அமா்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதுமாக மோட்டாா் வழக்குகள், குடும்ப வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சொத்துத் தகராறு வழக்குகள் ஆகியவை தொடா்பாக 5,929 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 2,092 வழக்குகளுக்குத் ரூ.51 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்துக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com