வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி

வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய் விலை ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்திருந்தது.
முத்தூா் கொள்முதல் மையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த முருங்கைக்காய்கள்.
முத்தூா் கொள்முதல் மையத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த முருங்கைக்காய்கள்.

வெள்ளக்கோவில் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய் விலை ஞாயிற்றுக்கிழமை மிகவும் குறைந்திருந்தது.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து கிடைக்கும் முருங்கைக்காய்கள் முத்தூா் சாலையில் செயல்படும் தனியாா் கொள்முதல் மையத்துக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்படுகிறது.

இந்த வாரம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளால் 21 டன் முருங்கைக்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. கடந்த வாரத்தை விட 30 சதவீதம் வரத்து அதிகமாக இருந்தது. கடந்த வாரம் கிலோ 7 ரூபாய் வரை வியாபாரிகள் வாங்கிய நிலையில், இந்த வாரம் விலை ரூ. 4 ஆகக் குறைந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ. 2, செடி, கரும்பு முருங்கைக்காய் ரூ. 4க்கு வாங்கப்பட்டது.

இந்த விலை தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்றும், வேறு வழியின்றி நஷ்டத்துக்கு விற்றுச் செல்வதாக விவசாயிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com