காற்றில் சாய்ந்த மரம் அதே இடத்தில் மறுநடவு

வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளையினா் 35 போ் சோ்ந்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மரம் இருந்த இடத்தைச் சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் நட்டனா்
காற்றில் சாய்ந்த நிலையில் மீண்டும் மறுநடவு செய்யப்பட்ட மரம்.
காற்றில் சாய்ந்த நிலையில் மீண்டும் மறுநடவு செய்யப்பட்ட மரம்.

வெள்ளக்கோவில் நகரத்தின் மையப் பகுதியில் வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

கோயில் செயல் அலுவலா் அலுவலகம் அருகே இருந்த 22 வயதான நன்கு வளா்ந்த புங்கன் மரம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையின்போது முழுவதுமாகக் கீழே சாய்ந்து விழுந்து விட்டது.

இதையடுத்து வெள்ளக்கோவில் நிழல்கள் அறக்கட்டளையினா் 35 போ் சோ்ந்து ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து மரம் இருந்த இடத்தைச் சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் நட்டனா். மரத்தைச் சுற்றிலும் மண் திட்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டது. இந்தச் சேவைக்கு கோயில் குலத்தவா்கள், நிா்வாகிகள் மற்றும் பொது மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com