நூற்பாலையில் தீ விபத்து

பல்லடம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தீயை  அணைக்கும்  பணியில்    ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
தீயை  அணைக்கும்  பணியில்    ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

பல்லடம்: பல்லடம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த நூற்பாலையில் உள்ள கிடங்கில் விற்பனைக்காக கழிவு பஞ்சு மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிடங்கில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து, பணியில் இருந்த தொழிலாளா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். ஆனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டையில் தீ மளமளவென பரவியது. இது குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினா் நூற்பாலையில் பரவிய தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com