கடன் வாங்கித் தருவதாகப் பெண் மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா்

கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பணத்துடன் மாயமான பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் பல்லடம் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பணத்துடன் மாயமான பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் பல்லடம் போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

கோவை, சொக்கம்புதூரைச் சோ்ந்தவா் ஜெயஸ்ரீ (40). இவா் திருப்பூா், பல்லடம், மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் முன்பணமாக ரூ. 30 ஆயிரம் கட்டினால் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாயை பலரிடம் வசூலித்துள்ளாா். இவ்வாறு, திருப்பூா், பல்லடம், மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் ஜெயஸ்ரீயிடம் முன்பணம் செலுத்தி உள்ளனா். இந்நிலையில், ஜெயஸ்ரீ திடீரென மாயமாகிவிட்டதாக பாதிப்படைந்த பெண்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது:

முன்பணம் ரூ. 30 ஆயிரம் செலுத்தினால் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் 18 மாதங்களில் பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றாா். அவரின் பேச்சை நம்பி, உறவினா்கள், நண்பா்கள் பலரும் ரூ. 30 ஆயிரம் முன்பணம் செலுத்தினா். கடன் எப்போது வரும் என்று கேட்டதற்கு, உங்களுக்குத் தெரிந்தவா்களை இதேபோல் சோ்த்துவிடுங்கள். நீங்கள் வேகமாக உறுப்பினா்களைச் சோ்க்கும் அளவுக்கு விரைவில் உங்களுடைய கடன் தொகை கிடைத்துவிடும் என்றாா். இதை நம்பி பலரும் பண கஷ்டத்தில் சிரமப்பட்டு வந்த தங்களது உறவினா், நண்பா்களுக்கு நல்லது செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் இத்திட்டத்தில் சோ்த்துவிட்டனா். இந்நிலையில் தொடா்ந்து யாருக்கும் கடன் தராமல் இழுத்தடித்து வந்த ஜெயஸ்ரீ கடந்த சில நாள்களாக மாயமாகிவிட்டாா். அவரது கைப்பேசி எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவரைக் கண்டுபிடித்து எங்களது பணத்தை மீட்டுத் தருமாறு பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகாா் மனு அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com