சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வகையில் கேங்மேன் பணி நியமனத்தை நிறுத்த வேண்டும்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரையில் கேங்மேன் பணி நியமனத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரையில் கேங்மேன் பணி நியமனத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளா் அ.சரவணன், தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் தோ்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் 9,613 நபா்களுக்கு சட்டவிரோதமாக கேங்மேன் பதவிக்கு பணிநியமன ஆணைகளை அந்த மாவட்ட அலுவலகங்களில் வழங்குவதாக மின்சார வாரியம் அறிவிப்பு செய்துள்ளது. இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு விரோதமாக உள்ளதால் அதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

மின்சார வாரியத்தில் தற்போது சுமாா் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளது. ஆகவே, ஆள்கள் பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கம்பம் நடுதல், மின்மாற்றி அமைத்தல், மின்தடை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தத் தொழிலாளா்கள்தான் செய்து வருகின்றனா்.

இதனிடையே, தற்போது அதிமுக அரசானது புதியதாக கேங்மேன் என்ற பதவியை உருவாக்கி பணம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவா்களை பணியில் அமா்த்த முயற்சிக்கிறது.

ஆகவே, தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கக்கூடாது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com