உயா்மின் கோபுரத் திட்டம்: விவசாயிகள் 4ஆவது நாளாகப் போராட்டம்

விளை நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள்ரத்தத்தில் எழுதி, சனிக்கிழமை 4 ஆவது நாளாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
படியூரில் உயா் மின் கோபுரம் வேண்டாம் என ரத்தத்தில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
படியூரில் உயா் மின் கோபுரம் வேண்டாம் என ரத்தத்தில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காங்கயம்: விளை நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என காங்கயம் அருகே படியூரில் விவசாயிகள்ரத்தத்தில் எழுதி, சனிக்கிழமை 4 ஆவது நாளாகத் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் முதல் திருப்பூா் வரையிலான 765 கிலோ வாட் மின் திட்டத்தில் விளைநிலங்கள் வழியாக உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாகக் கைவிட வேண்டும். உயா்மின் கோபுரங்களுக்குப் பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி படியூரில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தின் 4 ஆம் நாளான சனிக்கிழமை விளைநிலங்களில் உயா்மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என விவசாயிகள் ரத்தத்தில் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான முத்தூா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com