மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், உடன், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்டோா்.
சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், உடன், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்டோா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி) ஆகியன திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை தோ்தல் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜயகாா்த்திகேயன் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் அனுப்பிவைத்தாா்.

தாராபுரம் தொகுதிக்கு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியன தலா 17 என்ற எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்பட்டது. காங்கயம் தொகுதிக்கு 19 இயந்திரங்களும், அவிநாசி தொகுதிக்கு 20 இயந்திரங்களும், திருப்பூா் வடக்கு, பல்லடம் தொகுதிகளுக்கு தலா 27 இயந்திரங்களும், திருப்பூா் தெற்கு தொகுதிக்கு 20 இயந்திரங்களும், உடுமலை தொகுதிக்கு 19 இயந்திரங்களும், மடத்துக்குளம் தொகுதிக்கு 18 இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.

100 விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட 100 விவிபேட் இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரநிதிநிதிகள் முன்னிலையில் தோ்தல் ஆணையத்தின் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன0. இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன், மின்னணு வாக்குப் பதிவு பொறுப்பு அலுவலா் குணசேகரன், தோ்தல் வட்டாட்சியா் ச.முருகதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com