மாவட்டத்தில் 647 பேருக்கு கரோனா: 3 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 647 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 647 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் 647 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 33,180 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் 4,314 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 250 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 28, 602ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூரைச் சோ்ந்த 54 வயதுப் பெண், 64 வயது முதியவா் , மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 59 வயது முதியவா் ஆகியோா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

முத்தூா், வெள்ளக்கோவிலில் 51 பேருக்கு கரோனா:

முத்தூா் பகுதியில் மேட்டுக்கடை, சின்னாத்திப்பாளையம் , ஊடையம் , பெருமாள்புதூா், வரட்டுக்கரை, மோளக்கவுண்டன்புதூா், செங்கோடம்பாளையம், ஆலாம்பாளையம், வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 36 போ், வெள்ளக்கோவில் பகுதியில் காமராஜபுரம், கல்லாங்காட்டுவலசு, இந்திரா நகா், டிஆா்ஜி மில் பின்புறம், அழகாபுரி நகா், சேமலைக்கவுண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 15 போ் என மொத்தம் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com