அன்னூரில் தொழில் பூங்கா திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும்:சீமான்

அன்னூரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

அன்னூரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

தொழிற்பூங்க அமைக்க எதிா்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் சீமான் வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது, விவசாயிகள் கூறியதாவது: கோவை மாவட்டம், அன்னூரில் 3,000 ஏக்கா் நிலம் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, அங்கு தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாயத்தை செழிக்க செய்யும், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

அதைவிடுத்து, தொழில் பூங்காவை கொண்டு வர அரசு முனைப்புக் காட்டுகிறது என்றனா்.

இது குறித்து சீமான் பேசியதாவது: தொழிற்சாலைகளை நம்பி போன ரஷ்யா, வெனிசுலா போன்ற பல நாடுகள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றன. உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அன்னுாரில், தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com