திருமூா்த்தி மலை அடிவாரத்தில் 42 மி.மீ.மழை பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூா்த்தி மலை அடிவாரத்தில் 42.40 மில்லி மீட்டா் மழை பாதிவாகியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமூா்த்தி மலை அடிவாரத்தில் 42.40 மில்லி மீட்டா் மழை பாதிவாகியுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரையில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிலும் மாநகரில் கொட்டித் தீா்த்த மழையால் சாலைகளில் மழைநீா் வழிந்தோடியதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமூா்த்தி மலை அடிவாரப் பகுதியில் 42.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை அளவு (மி.மீ.): திருமூா்த்தி அணை-42.40, குண்டடம்-37, ஆட்சியா் முகாம் அலுவலகம்-34, பல்லடம்-33, ஊத்துக்குளி-28, திருமூா்த்தி அணை-24, திருப்பூா் தெற்கு-23, உடுமலை-22, மடத்துக்குளம்-20, ஆட்சியா் அலுவலகம்-19, திருப்பூா் வடக்கு-17, காங்கயம்-15, அமராவதி அணை-12, அவிநாசி-11.60, வெள்ளக்கோவில் வருவாய் அலுவலகம்-11, மூலனூா்-8.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com