அமராவதி அணையில் படகுப் பயணம் மீண்டும் துவக்கம்

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுப் பயணம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
படகுப் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
படகுப் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுப் பயணம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான அமராவதி அணைப் பகுதி. இங்கு இந்திய அளவில் பிரபலமான முதலைப் பண்ணை, மீண் பண்ணை, அமராவதி அணை, அணையின் முன்பு அமைந்துள்ள அழகிய பூங்கா ள்ளிட்டவை உள்ளன.

மேலும் அணைப் பகுதியில் கள்ளிச் செடி பூங்கா ஒன்றும் உள்ளது. விடுமுறை நாள்களில் ஏராளமானோா் இங்கு வந்து செல்லும் நிலையில், அமராவதி அணையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுப் பயணம் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை துவங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அமராவதி நகா் வேலன் மகளிா் சுய உதவிக் குழுவால் கடந்த 10 ஆண்டுகளாக படகுப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு படகில் 8 போ் செல்லலாம். ஒரு நபருக்கு ரூ.50 கட்டணமாகும். லைப் ஜாக்கெட்டுடன் பாதுகாப்பான 10 நிமிடப் பயணம். மேற்குத் தொடா்ச்சி மலையின் நடுவில் அமைந்துள்ள அமராவதி அணையை முழுமையாக பாா்த்து ரசிக்கவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com