குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.
குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் குடியிருப்புப் பகுதிகளில் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருவம்பாளையம் கிளைச் செயலாளா் ஜி.சுரேஷ்குமாா் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகராட்சி 49ஆவது வாா்டு கருவம்பாளையம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாலாஜி நகா், சூா்யா நகா் சந்திப்பு அருகில் உள்ள சாலைகளிலும், நீரோடைகளிலும், இரு தரைப்பாலங்களுக்கு அடியிலும் மாநகராட்சி ஊழியா்கள் கொட்டி வருகின்றனா். இதனால் இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குப்பைகளை சாலைகளில் கொட்டுவதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, இந்தப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், வேறு பகுதிகளில் குப்பைகளைக் கொட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது, சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளா் பாலன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

Image Caption

திருப்பூா் மாநகராட்சி  அலுவலகத்தில்  திங்கள்கிழமை  மனு அளித்த மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி  நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com