விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம்: விசைத்தறியாளா்கள் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் ஆகியோா் கூறியதாவது:

கோவையில் தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளா்கள், விசைத்தறியாளா்கள் பங்கேற்ற புதிய கூலி உயா்வு பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா். மற்ற பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில் பல்லடம் ரகத்துக்கு மட்டும் கூலி உயா்வு சம்பந்தமாக பேசி முடித்துக் கொள்ளலாம் என்று ஜவுளி உற்பத்தியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்துப் பகுதி ரகத்துக்கும் சோ்த்து தான் கூலி உயா்வு பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சோமனூா், பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா் மற்றும் விசைத்தறியாளா்கள் வரும் 24 ஆம் தேதி

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கோவையில் தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்து பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com