‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’: திருப்பூரில் துவங்கியது விழிப்புணர்வு கலைப்பயணம்

தமிழக அரசின் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் விழிப்புணர்வு கலைப் பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.
கலைப் பயணத்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ. செல்வராஜ்
கலைப் பயணத்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ. செல்வராஜ்

தமிழக அரசின் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் விழிப்புணர்வு கலைப் பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.

தமிழக பள்ளி கல்விதுறையின் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தில் சார்பில் மாநிலம் முழுவதும் ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கலைப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கலைக் குழுவிற்கான மாநில அளவிலான பயிற்சி கடந்த செப்டம்பர் 14 முதல் 16 வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டத்தில் செப்.21 முதல் செப்.30 வரை 10 நாள்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் சார்பில் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி துவக்க விழாவில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தொகுதி பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் பங்கேற்று கலைப் பயணத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்தவர்களை ஜெய்வாபாய் பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டெல்லா அமலோர்பவ மேரி வரவேற்றுப் பேசினார். திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் ர.ரமேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் முனைவர் கோ.மு.நசீரா மற்றும் முன்னாள் தலைவர் ஆ.ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். இறுதியாக அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் வே.கார்த்திக் நன்றி தெரிவித்தார்.

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வு குறித்து அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கெளரி சங்கர் கூறியது:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து செப்டம்பர் 21 முதல் 30 வரை கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். நாள்தோறும் இரண்டு பள்ளிகளிலும் மாலை நேரத்தில் பொது வெளியிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெறும் கற்போம் எழுதுவோம் இயக்கத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com