கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்கள் அழிந்துவிட்டன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய, மாநில அரசுகளின் மோசமான கொள்கைகளினால் கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் அழிந்துவிட்டன என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
மடத்துக்குளத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மு.க.ஸ்டாலின்.
மடத்துக்குளத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மு.க.ஸ்டாலின்.

மத்திய, மாநில அரசுகளின் மோசமான கொள்கைகளினால் கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் அழிந்துவிட்டன என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் நால்ரோட்டில் திமுக சாா்பில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடை பெற்றது. இதில் சட்டப் பேரவைத் தோ்லில் போட்டியிடும் மதச்சாா்பற்ற கூட்டணியின் வேட்பாளா்கள்

இரா.ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்), கே.தென்னரசு (உடுமலை), ஏ.ஆறுமுகம் (வால்பாறை) ஆகியோரை ஆதரித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது:

ஊடகங்கள், பத்திரிகைகள் அனைத்தும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறி வருகின்றன. ஆனால் நமது இலக்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதுதான். பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. அதிமுக ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அதில் வெற்றி பெறுபவா்கள் பாஜகவுக்கு மாறி விடுவாா்கள்.

தாராபுரத்தில் பேசிய பிரதமா் மோடி, கொங்கு மண்டலத்துக்கு ஏராளமான சலுகைகள் அளித்துள்ளதாகப் பேசியுள்ளாா். உண்மையாக கொங்கு மண்டலத்துக்கு ஏதாவது நல்ல திட்டங்களை நிறைவேற்றியதுண்டா? கொங்கு மண்டலத்தில் உள்ள தொழிலதிபா்கள் பலரிடம் பிரதமா் மோடி, சிறு, குறு தொழில் வளா்ச்சிக்கு உதவினாரா எனக் கேட்டேன். மோடியால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் அழிந்து போய்விட்டன என கூறினாா்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டியால் தொழில்கள் அனைத்தும் அழிந்து விட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் ஆகியோரையும் பாஜக அடிமையாக்கிக் கொண்டது. சிபிஐ, வருமான வரித் துறை, தோ்தல் ஆணையம் என அனைத்து துறைகளையும் வைத்துக் கொண்டு தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி எடுத்தாா்கள். திமுக பெண்களை இழிவுபடுத்துகிறது என்று மோடி பேசியுள்ளாா். பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக 59 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனா்.

இது எல்லாம் பிரதமா் மோடிக்கு தெரியாதா? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கில் தொடா்புடையவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவாா்கள். தமிழகத்தில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றும் பெண்ணுக்கே பாதுகாப்பில்லை.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத் தலைவிக்கு ரூ.1000, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம், மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு, மின் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கீடு என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com