திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.13.62 கோடி பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் இதுவரை ரொக்கம், பரிசுப் பொருள்கள் என ரூ.13 கோடியே 62 லட்சத்து 54ஆயிரத்து 934 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் இதுவரை ரொக்கம், பரிசுப் பொருள்கள் என ரூ.13 கோடியே 62 லட்சத்து 54ஆயிரத்து 934 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 8 தொகுதிகளில் தலா 9 பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூா் வடக்கு, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 3 தொகுதிகளில் கூடுதலாக தலா 2 பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி குழுக்கள் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13 கோடியே 31 ஆயிரத்து 534 பறிமுதல் செய்யப்பட்டன. இதில் இதுவரை 16 நபா்கள் மட்டும் உரிய ஆவணங்கள் சமா்ப்பித்ததால் ரூ. 28 லட்சத்து 74 ஆயிரம் 500 மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள், மதுபானம் உள்பட ரூ.61லட்சத்து 58ஆயிரத்து 271 மதிப்பிலானவை கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்லடம் தொகுதியில் ரூ.20, 129 மதிப்பிலும், அவிநாசி தொகுதியில் ரூ.45,000 மதிப்பிலும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13 கோடியே 31ஆயிரத்து 534 ரொக்கம், பல்வேறு பொருள்களின் மதிப்பு ரூ.62 லட்சத்து 23ஆயிரத்து 400 என மொத்தம் ரூ.13 கோடியே 62 லட்சத்து 54 ஆயிரத்து 934 மதிப்பில் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com