அவிநாசியில் 10 ஆயிரம் பனியன்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 03:26 AM | Last Updated : 04th April 2021 03:26 AM | அ+அ அ- |

அவிநாசி பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 10 ஆயிரத்து 205 பனியன்களை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் அவிநாசி-சேவூா் சாலை தண்ணீா்ப்பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது தண்ணீா்ப்பந்தலில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்ற சரக்கு வாகனத்தைப் பரிசோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்களின்றி 8500 பனியன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
அவிநாசி, அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே, அன்னூா் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தில் தோ்தல் பறக்கும் படையினா் பரிசோதனை மேற்கொண்டனா்.
அதில் உரிய ஆவணங்களின்றி 1,705 பனியன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 10,205 பனியன்களை அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் அவிநாசி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.