திருப்பூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 177 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th April 2021 12:03 AM | Last Updated : 12th April 2021 12:03 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 20,639ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,106 போ் போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 77 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19,304ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 229 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடா்ந்து அதிகரித்தும் கரோனா: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் 150ஐ கடந்து வருகிறது. ஆகவே, பொது வெளியில் நடமாடும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.