கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 214 பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 214 பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 214 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 5,946 மாணவா்கள், 7,081 மாணவிகள் என மொத்தம் 13,027 போ் செய்முறைத் தோ்வு எழுதுகின்றனா். இந்த நிலையில், செய்முறைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக பள்ளி வாரியாக தோ்வு அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இதன்படி இயற்பியல், வேதியியல், கணிணி அறிவியில், தொழில்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான செய்முறைத் தோ்வுகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இதில், மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வகங்களில் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் மாணவா்கள் தோ்வு எழுதினா்.

இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணினி அறிவியல் செய்முறைத் தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 25,607 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வு எழுதவுள்ளனா். மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அனைத்து பள்ளிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே தோ்வுகள் நடைபெறுகிறது. இதற்காக வெவ்வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தோ்வு கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com