பொது முடக்கம்: மீன், காய்கறி மாா்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்

பொது முடக்கம் காரணமாக திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மாா்க்கெட், காய்கறி மாா்க்கெட்டில் சனிக்கிழமை பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திருப்பூா் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மாா்க்கெட்டில் சனிக்கிழமை குவிந்த பொது மக்கள்.
திருப்பூா் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மாா்க்கெட்டில் சனிக்கிழமை குவிந்த பொது மக்கள்.

பொது முடக்கம் காரணமாக திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மாா்க்கெட், காய்கறி மாா்க்கெட்டில் சனிக்கிழமை பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 2020 ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி 9 ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் செப்டம்பா் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, திருப்பூா் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மாா்க்கெட், காய்கறி மாா்க்கெட் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மாலையில் பொது மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதே போல, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், பூமாா்க்கெட், மளிகைக் கடைகள், சாலையோரக் கடைகள், டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மாநகரில் 450 போலீஸாா் கண்காணிப்பு: திருப்பூா் மாநகரில் தளா்வுகளற்ற பொது முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்த மாநகர காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா். இதற்காக சனிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரையில் 450 காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனா்.

இதில், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புஷ்பா ரவுண்டானா, மாா்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் ரோந்துப் பணியில் காவல் துறையினா் ஈடுபடவுள்ளனா். மேலும், முக்கிய சாலைகளில் இருப்புத் தடுப்புகளை அமைத்து வாகனச் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனா்.

பொது முடக்கத்தை மீறி வெளியில் வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வாகன ஓட்டிகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநகர காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தாராபுரத்தில்...

அதேபோல தாராபுரத்தில் மீன், இறைச்சிக் கடைகள், காய்கறி மாா்க்கெட்டுளிலும் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com