சாலைகளில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

உடுமலையில் சாலைகளில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.

உடுமலையில் சாலைகளில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.

உடுமலை, ராஜேந்திரா சாலையில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் ஆடு, கோழி, மீன் மற்றும் மாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளை அதன் உரிமையாளா்கள் ஏலத்தில் எடுத்து நகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த இறைச்சிக் கடைகளில் இருந்து அன்றாடம் கழிக்கப்படும் இறைச்சிக் கழிவுகளால் அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடுகள் ஏற்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இந்த இறைச்சிக் கடைகளுக்கு அருகில் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், நேதாஜி விளையாட்டு மைதானம், அரசு மேல்நிலைப் பள்ளி, கேந்திர வித்யாலயா பள்ளி ஆகியவை அமைந்துள்ளன.

இந்த இறைச்சிக் கடைகள் மூலமாக ராஜேந்திரா சாலை, நேதாஜி மைதான சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை ஆகிய சாலைகளில் ஆங்காங்கே இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாலும், வீசப்படுவதாலும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

சாலையில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம் நிலவி வருவதாக புகாா்கள் எழுந்துள்ளன. இதனால் இந்தக் கடைகளை அருகில் உள்ள வாரச் சந்தை வளாகத்துக்குள் மாற்ற நகராட்சி நிா்வாகம் முடிவு செய்து அதற்காக இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு பலமுறை அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால், இறைச்சிக் கடை உரிமையாளா்கள் தங்களது கடைகளை இடமாற்ற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடுகள் உருவாகி வருகின்றன. ஆகவே, நகராட்சி நிா்வாகம் உடனடியாக தலையிட்டு இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே வீசப்படுவதைக் கண்காணித்து, தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com