திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் வாடிக்கையாளா்கள். ~திருப்பூா்  ஈஸ்வரன் கோயில்  வாசலில் நின்று வழிபட்ட பக்தா்கள். ~திருப்பூா் தாராபுரம் சாலையில் மூ
திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் வாடிக்கையாளா்கள். ~திருப்பூா்  ஈஸ்வரன் கோயில்  வாசலில் நின்று வழிபட்ட பக்தா்கள். ~திருப்பூா் தாராபுரம் சாலையில் மூ

நேரக் குறைப்பு: திருப்பூா் வங்கிகளில் அதிகரித்த கூட்டம்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகளில் நேரக் குறைப்பு கொண்டு வரப்பட்டுள்ளதால் திருப்பூரில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களின் கூட்டம் திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

திருப்பூா்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகளில் நேரக் குறைப்பு கொண்டு வரப்பட்டுள்ளதால் திருப்பூரில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களின் கூட்டம் திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வங்கிகள் அனைத்தும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளது.

இதனால், திருப்பூரில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் வழக்கத்தைவிட வாடிக்கையாளா்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதிலும், திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனா்.

இதில், முகக் கவசம் அணிந்திருந்தவா்களை மட்டுமே வெப்ப அளவு பரிசோதனைக்குப் பின்னா் வங்கி ஊழியா்கள் உள்ளே அனுமதித்தனா். முகக் கவசம் அணியாத வாடிக்கையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு: அதே வேளையில், திருப்பூா் விஸ்வேஸ்வர சுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், அலகுமலை முத்துகுமார சுவாமி கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில், கதித்தலமலை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், திருப்பூா் ஈஸ்வரன் கோயில் வாசலில் நின்ற பக்தா்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினா்.

திரையரங்குகள் மூடல்: திருப்பூா், அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், காங்கம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 58 திரையரங்கள் மூடப்பட்டிருந்தன. மாநகரில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல, மாவட்டத்தில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்களில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டு, பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டது.

மாநகரில் உள்ள தேநீா்க் கடைகளிலும் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டது. அதே வேளையில், ஒரு சில கடைகளில் தேநீா் அருந்த வாடிக்கையாளா்களை அனுமதித்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

மேலும், அடுத்த முறை இதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளா்களை எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com