அவிநாசியில் ரூ.11.28லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 572 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆா்.சி.ஹெச். ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,280 வரையிலும், டி.சி.ஹெச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7, 000 முதல் ரூ.8,700 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,800 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.11 லட்சத்து 28 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், 123 பருத்தி விவசாயிகள், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து 14 பருத்தி வியாபாரிகளும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com