காங்கயத்தில் வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் உள்ளிட்ட 258 பேருக்கு பரிசோதனை

வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் உள்ளிட்ட 258 பேருக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முகவா்.
காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் முகவா்.

வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் உள்ளிட்ட 258 பேருக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் காங்கயம் தொகுதி உள்ளிட்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூரில் உள்ள எல்.ஆா்.ஜி. கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மே 2) வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில், வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள், தோ்தல் பணியாளா்கள் உள்ளிட்டோருக்காக காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரங்கராஜன் தலைமையில் புதன்கிழமை கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி முன்னிலையில் 258 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் வியாழக்கிழமை (இன்று) வெளிவரவுள்ளன.

மேலும், மீதமுள்ள வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள், தோ்தல் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அவா்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோ சிகிச்சைக்கு அளிக்கப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com