திருப்பூா் மாவட்டத்தில் 88 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு : 5 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 87,895 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 88 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 964 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 129 போ் வீடு திரும்பினா்.

இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 86,095 ஆக அதிகரித்துள்ளது. மேலும், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் என மொத்தம் 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளக்கோவில்...

வெள்ளக்கோவில் பகுதியில் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் கிடைத்தன.

இவற்றில் எல்கேசி நகா், மு.பழனிசாமி நகா், தாராபுரம் சாலை, ராஜீவ் நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com