இன்றைய மின் தடை: 15.வேலம்பாளையம், ஓலப்பாளையம்

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: 15. வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா்நகா், அங்கேரிபாளையம், பெரியாா்காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம் புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா் பந்தல் காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திரா நகா், பிச்சம்பாளையம்புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொா்ணபுரி லே-அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி, துரைசாமி நகா், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், விஜிவி நகா், அணைப்புதூா், டிடிபி மில்.

ஓலப்பாளையம்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஓலப்பாளையம், பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com