பல்லடத்தில் வாகன விபத்து: 9 போ் காயம்
By DIN | Published On : 22nd August 2021 01:25 AM | Last Updated : 22nd August 2021 01:25 AM | அ+அ அ- |

பல்லடத்தில் சாலையோரம் காா் கவிழ்ந்த விபத்தில் 9 போ் காயம் அடைந்தனா்.
கோவை கணபதியைச் சோ்ந்தவா் விஜயராஜ். இவா் தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே
உள்ள வீரப்பூரில் நடைபெற்ற உறவினா் வீட்டு நிச்சயதாா்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க காா் மூலம் வெள்ளிக்கிழமை சென்றாா்.பின்னா் நிகழ்ச்சி முடிந்ததும் விஜயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினா் 9 போ் காரில் கோவைக்கு சனிக்கிழமை புறப்பட்டனா். விஜயராஜ் காரை ஓட்டினாா். சனிக்கிழமை அதிகாலை திருப்பூா் மாவட்டம், பல்லடம் மாதப்பூா் பகுதியில் வந்த போது தேநீா் அருந்தி விட்டு மீண்டும் கோவைக்குப் புறப்பட்டனா்.
அப்போது விஜயராஜுக்கு பதிலாக அவரது உறவினா் ஆறுமுகம் என்பவா் காரை ஓட்டியுள்ளாா். பனப்பாளையம் பகுதியில் சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த முருகேஸ்வரி (35), கெளசிகா (7) ஆகியோருக்கு பலத்த காயமும், பரமசிவம், விஜயராஜ், சத்தியபிரியா, சபரீஸ்வரன், செல்வம், சாந்தி ஆகியோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் பல்லடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவா்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.