அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 800 குட்டைகளை இணைக்க வலியுறுத்தல்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 800 குட்டை, நீா்நிலைகளை இணைக்க வேண்டும் என போராட்டக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்றோா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 800 குட்டை, நீா்நிலைகளை இணைக்க வேண்டும் என போராட்டக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

அத்திக்கடவு போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் தொரவலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரதிய கிஷான் சங்க மாவட்டத் தலைவரும், அத்திக்கடவு திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.வேலுசாமி தலைமை வகித்தாா். தொரவலூா் சம்பத், பிரபாகரன், சந்திரமூா்த்தி, வேணி, ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் அவிநாசி, பெருந்துறை, தொரவலூா், பெருமாநல்லூா், குன்னத்தூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 800 குட்டைகள் கணக்கெடுப்பின்போது விடுபட்டுள்ளது. இந்த 800 குட்டைகளையும் நிரப்பினால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, கிராமங்கள் வெகுவாகப் பயனடையும். விவசாயமும் தழைக்கும், ஆகவே விடுபட்ட குட்டைகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடா்பாக விரைவில் தமிழக முதல்வா், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com