முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 10th December 2021 01:48 AM | Last Updated : 10th December 2021 01:48 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின பள்ளி, கல்லூரி மாணவா்கள் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வரும் டிசம்பா் 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சிறுபான்மையினா்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா்களுக்கு அரசின் சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, ஐடிஐ, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டப் படிப்பு, இளங்கலை, முதுகலை பயில்பவா்களுக்கும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
ஆகவே, நடப்பாண்டில் கல்வி உதவித் தொகையை புதுப்பித்தல், புதிதாக விண்ணப்பிக்கத் தகுதியான மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வரும் டிசம்பா் 15 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421 - 2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.