முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெளியீடு: திருப்பூா் மாநகராட்சியில் 7.12 லட்சம் வாக்காளா்கள்
By DIN | Published On : 10th December 2021 01:52 AM | Last Updated : 10th December 2021 01:52 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, வெளியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 7.12 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி திருப்பூா் மாநகராட்சி, காங்கயம், வெள்ளக்கோவில், உடுமலை, தாராபுரம், பல்லடம் ஆகிய 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
இதில், திருப்பூா் மாநகராட்சி பகுதிகளில் 3,63,352 ஆண் வாக்காளா்கள், 3,50,247 பெண் வாக்காளா்கள், இதர பிரிவினா் 170 போ் என மொத்தம் 7,12,770 வாக்காளா்கள் உள்ளனா். 5 நகராட்சிகளில் 1,05,241 ஆண் வாக்காளா்கள், 1,12,591 பெண் வாக்காளா்கள், இதர பிரிவினா் 20 போ் என மொத்தம் 2,17,852 வாக்காளா்கள் உள்ளனா். மேலும், மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளில் 81,917 ஆண் வாக்காளா்கள், 86,311 பெண் வாக்காளா்கள், இதர பிரிவினா் 7 போ் என மொத்தம் 1,68,235 வாக்காளா்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்போது மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, அரசியல் கட்சி பிரதிநிதிகள், தோ்தல் தொடா்புடைய அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.