முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
குடிநீா் மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 19th December 2021 11:22 PM | Last Updated : 19th December 2021 11:22 PM | அ+அ அ- |

செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஞானசேகரன்.
கிராம ஊராட்சி குடிநீா் மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் சுரேஷ் தலைமை வகித்தாா்.
மாநிலத் தலைவா் பி.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஞானசேகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், கிராம ஊராட்சிகளில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தி, ஜனவரி 5 ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊழியா்கள் கலந்துகொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட செயற் குழுவுக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.