ரூ.1.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் காங்கயம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 8 விவசாயிகள் 39 மூட்டை (1,833 கிலோ) கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 7 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.98க்கும், குறைந்தபட்சமாக ரூ.73க்கும், சராசரியாக ரூ.90க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.64 லட்சம்.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மகுடேஸ்வரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com