மூலனூரில் ரூ.57 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
By DIN | Published On : 06th February 2021 12:24 AM | Last Updated : 06th February 2021 12:24 AM | அ+அ அ- |

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 57 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 விவசாயிகள் 2,967 மூட்டைகளில் மொத்தம் 1,024 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். குவிண்டால் ரூ.4,700 முதல் ரூ.6,464 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.5,500. மொத்தம் ரூ.56 லட்சத்து 93 ஆயிரத்து 951க்கு விற்பனை நடைபெற்றது. விற்பனைத் தொகை அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தா்மராஜ் செய்திருந்தாா். இத்தகவலை திருப்பூா் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.