9ஆவது நாளாக சாலை மறியல்: 130 அரசு ஊழியா்கள் கைது

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடா் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு 9 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். பழைய ஓய்வூதியத்தை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வயிற்றில் ஈரத்துணி கட்டி ஒப்பாரி வைத்தனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 130 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com