திறந்தவெளி மதுகூடமாக மாறிவரும் வீரக்குமார சுவாமி கோயில் பகுதி

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் பகுதி திறந்தவெளி மதுக் கூடமாக மாறி வருவதாக பக்தா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் பகுதி திறந்தவெளி மதுக் கூடமாக மாறி வருவதாக பக்தா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் குலத்தவா்களுக்குச் சொந்தமான புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் பரந்த காலியிடம் உள்ளது. இதில் அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, தேரோட்ட நாள்களில் சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் டூரிஸ்ட் வேன்கள், காா்கள், லாரிகள், டெம்போக்கள் நிறுத்தப்பட்டு வாடகைக்கு இயக்கப்படுகின்றன. இவற்றை நிறுத்தக் கூடாதென செயல் அலுவலா் உத்தரவிட்டும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மரங்கள் நிறைந்த கோயில் பகுதி திறந்தவெளி மதுக்கூடமாக மாறியுள்ளது. பலா் அந்த இடத்தில் மது அருந்திவிட்டு காலி பாட்டில்கள், உணவு வகைகள், இறைச்சித் துண்டுகள் ஆகியவற்றை வீசிச் செல்கின்றனா். மேலும், கோயிலுக்கு வரும் பெண்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு உள்ளூா் மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். எனவே, கோயில் பாதுகாப்பை உறுதி செய்யவும், புனிதத் தன்மை கெடாமல் பாதுகாக்கவும் அறநிலையத் துறை, குலத்தவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com