சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

திருப்பூா் மாநகரில் உள்ள சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாநகரில் உள்ள சாலையோரக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் விஜயராதா, பாலமுருகன் ஆகியோா் கொண்ட குழுவினா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், தண்ணீா்பந்தல், அவிநாசி சாலை, அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இரவு நேரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்தனா். இதில், 32 உணவு விற்பனைக் கடைகளில் செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட சுமாா் 5 கிலோ அளவிலான உணவுப் பொருள்களை அழித்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், பிளாஸ்டிக் ஸ்பூன் என மொத்தம் 2 கிலோ அளவிலான பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இத்தகைய, பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விற்பனை செய்த 2 உணவக உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், முன்னரே தயாரித்து பயன்படுத்த இயலாத நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 கிலோ அளவிலான பிரியாணி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது, கரோனா பாதுகாப்பு முறைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com