விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்த நெல்லுக்கு சேவை வரி

விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்த நெல்லுக்கு சேவை வரி விதிப்பதாக தமிழக முதல்வரிடம் அரிசி ஆலை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்த நெல்லுக்கு சேவை வரி விதிப்பதாக தமிழக முதல்வரிடம் அரிசி ஆலை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேல் தலைமையில், தோ்தல் பிரசாரத்துக்காக காங்கயம் வந்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்தும், அதிகப்படியான மழையால் விளைந்த நெல் தரம் குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த சூழ்நிலையில், தில்லியில் போராடி வரும் விவசாயிகள் நீதிமன்றத்தின் மூலம் பெற்ற தடை ஆணையைக் காரணம் காட்டி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்த நெல்லுக்கு சேவை வரி (செஸ்) செலுத்தச் சொல்லி நெல் ஏற்றி வரும் வாகனங்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனா்.

எனவே வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதற்காக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் நெல்லுக்கு செஸ் கட்டணத்தை ரத்து செய்து கொடுக்குமாறு தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பாக கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com