குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி ஒன்றியம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீா் கோரி சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீா் கோரி சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

அவிநாசி ஒன்றியம், சேவூா் அருகே தண்டுக்காரன்பாளையத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட குமாரபாளையம், தண்டுக்காரன்பாளையம் ஆகிய ஆதிதிராவிடா் காலனிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் ஆழ்துளை கிணற்று நீா் வற்றியதால், ஆற்று குடிநீா் மட்டும் விநியோகிக்கப்பட்டு வந்தது. இரு நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த ஆற்று குடிநீரும் கடந்த 10 நாள்களாக நிறுத்தப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் அவிநாசி - புளியம்பட்டி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) ஹரிஹரன், சேவூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் ஆற்றுக்குடிநீா் தற்சமயம் தடைபட்டுள்ளது.

எனவே விரைவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை 6ஆவது வாா்டு பகுதியிலிருந்து முறையாக குடிநீா் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com